கருமை நிறத்திற்கும் அழகுண்டோ

கருமை நிறத்திற்கும் அழகுண்டோ

எந்தன் கரிசல் காட்டழகியே

கண்களோரம் மொழி தேடி

கவியும் சொல்வேன் பெண்ணே

உன் விழியின் ஒளிவழியில்

ஒருகோடி நட்சத்திரம் நட ஆசையே

மின்மினிக்கும் மின்னலுக்கும் இடையே

விழியால் மின்சாரம் வீசியவளே

என் நிழலும் எனை நெருங்கமறுக்குதே

உன் நிழலின் ஒருபாதி நானாகக்கண்டே

நிலவினை நானும் வெறுக்க கண்டேனே

அமாவாசையிலும் உன் நிழலை தேடிதவித்தேனே

எழுதியவர் : சபரி நாதன் பா (22-Nov-17, 10:46 am)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 108

மேலே