காதலால் காதல் பயணம்

அனைத்தும் முடிந்ததடி அன்பே ,,,

உன் விரல் பிடிக்கும் என் என் ஆசை ,,,

உன் தோல் சாயும் என் எண்ணம் ,,,

உன் மடி தூங்கும் என் கனவு ,,,

அனைத்தும் முடிந்ததடி ,,,

அடி அன்றே சொல்லியிருந்தால் ,,,

ஆசை கொண்டிருக்க மாட்டேன் ,,,

உயிர்க் காதல் கொண்டிருக்க மாட்டேன் ,,,

இன்று உன்னை எண்ணி எண்ணி ஏங்கி ,,,

நொடிந்து கொண்டிருக்க மாட்டேன் ,,,

விடியும் வரை பேசியும்

விடியலயா என் காதல் உன் மனதில் ,,,?

நான் மடியும் வரை வாழ ,,,

ஆசை கொண்டேனே உன் மனதில் ,,,

மகராசியே ஓர் நாள் உன் மனம் மாறினால் ,,,

மறவாதே இவ் உயிர் நேசனை ,,,,!

எழுதியவர் : பா.தமிழரசன் (22-Nov-17, 9:28 am)
சேர்த்தது : தமிழரசன் பாபு
பார்வை : 242

மேலே