பச்சைக்கிளி பட்டு

பச்சைக்கிளி பட்டுடுத்தி
பெண்ணொருத்தி நடந்துவர
சித்திரை பௌர்ணமி நிலவும்கூட
மொட்டைவெயிலிலும் தவமிருக்கும்
சில்லறையாய் அவள் சிரித்திருக்க
சிலிர்த்துப்போன தேகமெல்லாம்
காக்கக்கூட்டம் எச்சமிட
வாய்பிளந்து நின்றிருக்கும்
வாயழகன் மாயழகன்
அவன் போட்டி இவளென்று
வாய்ப்பூட்டிய மாடுகளும்
வாய்ச்சவடாலாய் கூச்சலிடும்
வாராலே பெண்ணொருத்தி
வாழைத்தேக்கு கலந்த பருத்தி
விடாமல் கண்ணிருத்தி
காளை மனமும் காத்திருக்கும்....

எழுதியவர் : சபரி நாதன் பா (23-Nov-17, 11:10 am)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 59

மேலே