முதல் பார்வையில்

முகிலினங்கள் மோதிக் கொட்டிய மழைக்காலம்
புள்ளினங்கள் நனைந்தமையால் "கதகதக்க" கூட்டிற்குள் புகுந்தன!

மழைக்கெதிராய் கருப்புச்சட்டை அணிந்த கம்பியை மடக்கி முடக்கி வைத்தேன் வீட்டில்
பாதையின் பாதியில் மக்களின் துணிகளை வெளுப்பதற்கு வெளுத்து வாங்கியது மழை!

நிழற்குடையில் ஒதுங்கிய நேரம் நிழலாடியதே அவளின் தேகம்
குடை "பிடிக்காததால்" மழையே பிடித்துக் கொடுத்த காதலின் கொடை!

பாதங்களைத் தரையில் சேர்த்து இமைகள் இரண்டையும் பிரித்து வைத்து தடுமாற்றம் தடுத்தேன்
என்னவளின் முகத்தில் இராமபாணமாய் ஊடுருவியது என்னிரு விழிகள்!

என் மீது விழுந்தது ஒருகணம் அவள் கண் கொண்ட பார்வை
அதில் இமைக்கு பதிலாக மின்னலைக் கொண்ட இருபோர்வை!

அவள் கூந்தல் அசைவு புயலாயடிக்க சரிந்தேன் காதலென்னும் புதைக்குழியில்,
அவள் கரம் நீட்ட காத்திருக்கிறேன்,
காதலின் வளையில் வெளியேறி
கற்பின் வழியில் வளையலிட!

எழுதியவர் : தமிழொளி (23-Nov-17, 12:23 pm)
சேர்த்தது : தமிழொளி
Tanglish : muthal paarvaiyil
பார்வை : 615

மேலே