காதலி
![](https://eluthu.com/images/loading.gif)
கருவிழி
காலக் கரை கடந்து காத்திருந்தேன்
காதலியவள் கருவிழி கண்டிட
.........................
இமை
இணையாயது இசைந்திட இனிமையாய் இறக்கிறேன்
இமை இவள் இச்சிமிட்டலில்
..........................
மூக்கழகி
முக்கடலில் மூழ்கி மறையும் மரணத்தை
முதல் மூச்சிலே முடித்திடுவாள்
.........................
இதழ்
தேனிடுத்த தேனிக்களின் தவபலனால் தரப்பட்ட
தேன்வங்கிய திவள் தேனிதழ்
.........................
முகம்
அழகை அற்புதழகாக்க அனுப்பபட்ட அதிசய
அச்சுப்பிரதி அழகிய அவமுகம்