விவசாயம்

விழுந்துவிட்டது என்றோ அழிந்துவிடுமா என்ற பயம் தான் இன்னும்

செம்பு நிறம் கொண்ட சேறு உங்கள் பாதத்தில் முத்தம் இட்ட வரை
வறுமை எனும் ஆறு எங்களை மூழ்கடிக்க வில்லை விதைப்பவர்களே
விதைகளை மண்ணுக்குள் நடவிட்டாய்
பல விருந்துகள் எங்களை தொட விட்டாய்
விதைகள் மண்ணுக்குள் பதிவது மீண்டும் எழத்தான்
விவசாயமே என்பதை சுட்டிக்காட்டுவது போல
விதைப்பவன் மண்ணுக்குள் பதிவது மீண்டே எழ முடியாது
விவசாயமே என்பதை சுட்டி காட்டி விட்டாய்
இடுப்பில் கந்தை துணி முடிந்து .சிறப்பாய் சந்தை பணி முடித்து
மகிழ்வாய் நீ நடமாடி பல நாட்கள் ஆகிவிட்டதோ!
ஆறு மாதம் களம் காணும் பயிர் விதைகளுக்குக்கு
அவை வெற்றி காண பயிற்சி அளிக்கும் மூத்த ஆசிரியன் நீதானே
உன் வெற்றிகளுக்கெல்லாம் தமிழகம் தந்த பரிசுதான் அரை நிர்வாணமோ?
இதை தட்டி கேட்காத நானெல்லாம் தரிசுதான்
இதற்கெல்லாம் இறைவனிடம் என்னதான் பரிகாரமோ ....
பூட்டி கிடக்கும் விவசாயத்தை திறக்கும் சாவியே புரட்சிதான்
நான் இருக்கும் வரை விவசாயம் அழியாது என்று
சொல்லும் ஒரு ஆண்மகனை தேடுகிறேன்
வா தோழா எழு தோழா உழு தோழா !!!
விழாது நம் உழவும் தமிழும் தோழா!!!

எழுதியவர் : ராஜேஷ் (23-Nov-17, 8:08 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : vivasaayam
பார்வை : 125

மேலே