அவள் பெயா்

அவள் பெயா்


தேடாத பொழுதில்
தொியாத புதிதில்
ஓா் புதிராய் அவளை சந்தித்தேன்
போகாத துன்பமும்
போக்கும் ஆற்றலை
அவள் உள்ளத்தால் உணர்ந்தேன்

அவள் குறும்புகள் கொஞ்சம்
என்னை மயக்க
வரம்புகள் கொண்ட உள்ளம்
கண்ணை மறைக்க
காதுகள் இரண்டும்
தூதுகள் கேள்க
காலம் அறியாமல்
என்னுள் உணர்ந்தேன் புது மாற்றம்

முதல் பாா்வைக் கண்டதும்
கா்வம் கொண்டேன்
முதல் அன்பைக் கண்டதும்
நெஞ்சம் கொண்டேன்
முகவரியின்றி காதல் கொண்டேன்
முதல்வாி எழுத கவிதைக் கொண்டேன்
எழுதும் கவிதையில் அவளை விதைத்தேன்
எழுதா நினைவுகளில் என்னைத் தொலைத்தேன்
நாளொரு கவிதையில் காதல் கேட்டேன்
நாம் என்னும் சொல்லிற்கு உயிரைக் கேட்டேன்

அவள் உயிரோடு வாழும் அன்பு உறவுகள்
அவள் நெஞ்சோடு பயணிக்கும் வாழ்க்கை எண்ணங்கள்
அவள் மனதோடு பயணிக்கும்
மௌன மொழிகள்
தினம் கனவோடு வாழும்
கானல் உள்ளங்கள்

கரையாத நாள்களும் இன்று
கரைந்தோடுகிறது
உருகாத உள்ளம் கூட
பனியாய் சிறு துளியாகிறது
ஏன் இந்த மாற்றம் என்று
என்னை கேள்கும் வேளையில்
செல் உந்தன் காதல் சொல் என்று
மனம் என்றும் துடிக்கிறது

மொழி இருந்தும்
விடைகூற மனமில்லை
மனமிருந்தும் எண்ணம்
தொலைக்க அவள் விரும்பவில்லை
நான் இருந்தும்
நெஞ்சமளிக்க இயலவில்லை
நெஞ்சமளித்தும் என்னை மறக்க இயலவில்லை

சிறு நிமிடங்கள்
முடிந்தாலும்
பல வருடங்கள்
காத்திருப்பேன்
உன் நெஞ்சோடு நெஞ்சம் சேரும் நாளை எதிர்ப் பார்த்திருப்பேன்
- சஜு

எழுதியவர் : சஜு (23-Nov-17, 10:00 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 139

மேலே