கம்பன் காதலி

தேன்நிறை மலரிவள் தீந்தமிழ்

பேசுகையில் வாய்வழி உதிர்ந்தன

வார்த்தைகள் அல்ல

வார்த்தெடுத்த அமுதங்கள்....

அதை அள்ளி பருகிடவே

எழுந்து வந்தேனடி

நான் கல்லறையிலிருந்து....

இப்படி ஓர் பேரழகி எதிர்காலத்தில்

பிறப்பாள் என அப்போதே

அறிந்துருந்தால் மரணத் தையும்

மறுபரிசீலனை செய்யசொல்லி

மன்றாடியிருந்திருப்பேன் அந்த

மரணதேவனிடம்........

பாடியது போதும்

என படுத் து

துயிலுற்றிருந்தவனை.......

பாடாய் படுத்தி பதம் பாட

அழைக்கிறதே இந்த

பனிமலர்சிலை........

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும்

கவிபாடும் "இது என்ன மேன்மை??

"காலமான கம்பனே கவிபாட

வந்தான் இந்த கலியுக அழகியைக்

கண்டு"இதுவன்றோ மேன்மை!!!....

ஓரவஞ்சனை புரிந்தானடி

பிரம்மன் உன்னை மட்டும்

பளிங்கால் படைத்து......

அழித்தல் செய்யும் சிவனும்

தவித்து போகிறானடி இப்படி ஓர்

அழகியை அழிப்பதா எனும்

குழப்பத்தில்.......

மார்கண்டேயனுக்கு அடுத் து

மற்றுமொரு யுத்தம்

மூளுமோ???

சிவனுக்கும் எமனுக்கும்

இவள் மரணத்தை தடுக்க!!!.......

சிகை பிரிந்த முடிகள்

நெற்றிப் பற்றி காது

கடந்து கண்ணம் தடவி

காவியம் வரைய........

அதற்கு வண்ணம் பூசுதடி

நின் வசியப் புன்னகை!!!.......

விசயனின் வில்லினும் வீரியமிக்க

வேல்விழிகள் மல்லுக்கு

அழைக்குதடி என்னை......

அழகின் ஆழம் அறிய பார்வைக்

கணைகளை பள்ளத்தை நோக்கிப்

பாய்ச்சுகையில் தடுப்பு

சுவர்களில் தடுக்கி விழுந்து

மூர்ச்சையுறச் செய்கின்றன நின்

தங்கம் வார்த்த அங்கங்கள் ......

முளரிப் பூக்களெல்லாம் முகம்

துக்கி வைத்துக்கொள்ளுதடி

நின் வதனத்தின்வனப்பைக் கண்டு

நெல்முனைக் கீறலாம் நின்

மெல்லிய இடையில் பள்ளி

கொல்லும் வாடையாய்

வாழ்ந்திட வாஞ்சை கொள்கிறேன்

வாய்ப்பளிப்பாயா????

உன் அங்கம் அலங்கரித்ததனால்

அன்றோ கூடிபோனது

தங்கத்தின் விலை ???

ஏளனம் செய்யுதடி கால்கொலுசு

கனிமேனியிவள் கால்

தீண்டிய கர்வத்தால்.....

எழுமையும் எச்சம் தானடி

சொச்ச அழகையே

சொல்லி முடிக்க!!!.....

இறைவா!!!

இன்னொரு பிறவி கொடு எனக்கு

அவளை கவிபாடியே

என் ஆவி போகட் டும்

இல்லையேல் ......

அமைதி கொள்ளாது என் ஆன்மா!!

எழுதியவர் : விஜய காமராஜ் (23-Nov-17, 9:43 pm)
சேர்த்தது : விமுகா
Tanglish : kamban kathali
பார்வை : 129

மேலே