கார்கால மாலைவேளை ....
மழை தொடங்கிய ஓர்
கார்கால மாலைநேரம் .
கடந்து சென்ற என்னைப் பார்த்து
" உன் குவளை நீர்
தேவையில்லை போ..போ..
இனி எங்கள் மேகத்தொழன்
பார்த்துக் கொள்வான் .."
கேலி செய்து சிரித்தன
என் செடித் தோழிகள் !
'கோடை வரும்
ஞாபகம் இருக்கட்டும் '
மிரட்டலாய் நான்.
'அதற்குள் வளர்ந்து விடுவோம்
சிறு மரங்களாக '
சிறு நகைப்புடன் அவைகள் ..
அரும்பிய சிறு கோபத்துடன்
திரும்பிய என்னை நிறுத்தி
'வேடிக்கை செய்தோம் பேடிப் பெண்ணே !
இந்தா சூடிக் கொள் '
என மரங்கள் தூவின
பன்னீர்ப் புஷ்பங்களை !....
.