என்னவள் அழகு
சீர்மிகு செந்தாமரை முகம்கொண்டு
அடர் கருமேகக் கூந்தல் தோளில் புரள
வட்ட நீண்ட மான் விழியாள் அவள்,
விழிமேல் வில்லொத்த புருவமிரண்டு,
அழகிய சிறிய சீனப் பெண் நாசி,
அதில் மின்னி ஒளி கொழிக்கும்
சிவப்புக் கல் மூக்குத்தி
வண்ணக் காதிரண்டில் பவள குண்டலங்கள்
தாமரைத்தண்டாம் கழுத்தில்
தங்கமணி ஹாரமும் வைர அட்டிகையும்
சின்ன இடைத்தாங்கிய சித்திர பாவை
அவள், சந்தன மெல்லிய உடலை
நீல நிற காஞ்சி பட்டு சீலை சுற்றி
மார்பின் கலசங்கள் இரண்டை
வெண்பட்டுக் கச்சை அள்ளி அணைக்க
கைகள் இரண்டில் நவரத்தின வளையல்கள்,
தந்ததில் வடித்த தொப்ப நீண்ட கால்கள்
அது தாங்கும் வெள்ளி கொலுசுகள் , அவள்
அன்னம்போல் அசைந்து அசைந்து நடந்து வர
ஜல் ஜல் என்ற ஓசை காதில் வந்து இசைக்க
என்னவள் இவள் மன்மதன் விண்ணிலிருந்து
மண்ணிற்கு அனுப்பிவைத்த ஊர்வசி போல்
என்மனதை மயக்கி என்முன்னே வந்து நிற்க
என்னை நான் முழுவதுமாய் அவளிடம்
தஞ்சம் அடைந்தேன் விளக்கில் மயங்கிய
விட்டில் போல்.செய்வதறியாது !