அன்பே
என் கல்லான நெஞ்சில் ஈரம் உண்டு அன்பே //
அதற்குள் கோடை வெயிலை கொடுத்து /
/ என் நெஞ்சின் ஈரம் மதனை உலர்த்தி அன்பே
ஏன் விலகி போனாய் //
என் எண்ணமெல்லாம் ஈடேறி
உன் நினைப்பு
பஞ்சமில்லாது
என்னை சிறை பிடித்து
என் பாசம் தன்னை உறிஞ்ச
உள்ளமெல்லாம் ஒன்றுபட்டு,
வசந்தமான
வாழ்வை விரும்பவே
அன்பே//
என் கல் நெஞ்சிலும் வாழ்வு கனவு
பூந்தோட்டம் மகிழ்ச்சியாக வளர
ஆனந்த தென்றலில் நனைந்தபடி
உன்வரவால் புது உதயம்
பூத்திடவே நானும் கனவு கண்டேன்
என் பாசம்மதனை உலர்த்தி
அன்பே! நீ பிரிந்து சென்ற போது
பாசம் இருந்த நெஞ்சம் உலர்ந்து போய்
செந்தனல்கள் வந்து மோதுதடி