உன் குரல் கேட்டால்

உன் குரல் கேட்டால்.....
கவிதை : கவிஞர் பூ.சுப்ரமணியன்

வட்டமிடும்
வண்டின் ஓசை
மலருக்குக் கேட்கிறது !

கரையில் தவழும்
அலைகளின் ஓசை
கடலுக்குக் கேட்கிறது !

வானில்
இடி இடிக்கும் ஓசை
பூமிக்குக் கேட்கிறது !

வீழும்
அருவியின் ஓசை
பாறைக்குக் கேட்கிறது !

வீசும்
தென்றலின் ஓசை
தென்னைக்குக் கேட்கிறது !

மீட்டும்
வீணையின் நாதம்
விரலுக்குக் கேட்கிறது !

அழும்
குழந்தையின் குரல்
அன்னைக்குக் கேட்கிறது !

உன் குரல் கேட்டு
அவன் இதயத்தில்
ஒலிக்கும் காதல் கீதம்
உனக்குக் கேட்கவில்லையா ?

உன் குரல் கேட்டால்
அவன் இதழ்களே
இன்னிசைக் குரல் எழுப்புகிறது !

தனிமையில் அமர்ந்து
அமைதியுடன் இதயத்தில்
உன் குரலைக் கேட்டுப்பார்
உலகமே வசப்படும்
மனிதநேயம் ஒலிக்கும் !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை,சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (25-Nov-17, 11:32 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : un kural kettaal
பார்வை : 1235

மேலே