காதல்
பார்த்த நாள் முதல்
உன்னை நான் பார்த்த
அந்த நாள் முதல்
என்னுள் நீ நிறைந்து விட்டாய்
என் சுவாசக் காற்றாய்
என்னை இயக்கி கொண்டிருக்கிறாய்
உன் பார்வை ஒன்றே போதும்
என்னன்பே காலமெல்லாம்
என்னை நல்லவனாய்
வல்லவனாய் நெறி தவறாது '
வாழும் தூயவனாய் ,
என்னை இயக்கும்
என் சுவாசக் காற்று !
நீ இல்லையேல் என் வாழ்வில்
நான் வெறும் கட்டையே
பிராணன் நீ, வெறும் ஜடமே நான்
என்று ஜீவித்துக்கொண்டிருக்கின்றேன்
இதை அறிந்து பெண்ணே நீ,
என்னைவிட்டு எங்கும் போய்விடாதே
நான் நினைப்பதுபோல் என்னை
இயக்கும் சுவாசக் காற்றாய் ,
என்னவளாய் காலமுழுதும் இருந்துவிடு
வாழ்ந்திடலாம் நாம்
ஈருடல் ஓருயிராய் !