அவள், நான், எங்கள் காலை பொழுது
விழிகளில் மையிட்டு
புருவம் குவித்து
அம்புதொடுக்கக் காத்திருக்கும்
அவள் பார்வை!!
பளிங்கு பிறையின் மையத்தில்
சிறுபொட்டு வைத்து
புவிஈர்ப்பு விசையை தோற்கடிக்கும்
அவள் நெற்றி!!
என்றும் அணியத்தவறா
இதழ்கள் சுளித்து
கன்னங்குழிகள் அலங்கரித்த
அவள் புன்னகை!!
கவிஞனையே சொல்லற்று போகச்செய்யும்
அழகோவியமாய் அவள்!
அவ்வோவியத்தை வர்ணிக்க திணரியபடி
எதிரில் தேநீர்குவளையுடன் நான்!
என தினமும் காவியமாய்
எங்கள் காலை பொழுது!!!