வாழ்த்து மடல்

சலுப்பை கிராமத்தில் .........
வனமயில் தாயின் கருப்பையில்
அவதரித்த ஆன்றோரே
சிரிப்பால் எல்லோரையும்
சிறைபிடித்து ................
வாழ்வில் சிறப்பாய்
இருப்பவரே ....
மூன்றாவது மழலையாக
மண்ணில் விழுந்தவரே
தொடக்கப்பள்ளியில் ......
தொடங்கிய உன் வாழ்க்கை
கல்லூரி வாசல்வரை
கால்பதித்து நின்றதென்ன
சாலை வசதிகளே .....இல்லாத
சலுப்பையில் ......
காலையில் எழுந்திருந்து
கல்லூரிக்கு செல்வாயே.
தாயின் கருவறையில் ....நீ
தங்கிருந்த நாட்களைவிட
கல்லூரி வகுப்பறையில் ..நீ
வந்துபோன நாட்கள் அதிகம்
எளிமைக்கு இலக்கணமாய்
என்றைக்கும் இருப்பவரே
சொல்வலிமையை உன்னிடத்தில்
சொந்தமாய் கொண்டவரே
உன் பனி சிறக்க ......நான்
உன்னை வாழ்த்தாமல் ..என்
அன்னை தமிழ் இருந்து...
என்னக்கென்ன பயன் ?
இரா. மாயா

எழுதியவர் : இரா .மாயா (25-Nov-17, 5:29 pm)
சேர்த்தது : மன்னை மாயா
Tanglish : vaazthu madal
பார்வை : 82

மேலே