கருவறை தேடாத உள்ளங்களும் உங்கள் கல்லறை தேடிவருதே

மாவீர செல்வங்களே.....!!

கொடிய பகையழித்து
கொடிபறந்த
தேசத்திலே
கூடிநின்று
குள்ளநரிகள்
கூத்தடிக்குது.....இன்று....!!

தன்னுயிரை
நம்முயிராய்
களத்திலே
தந்த வீரன்
நம்
தலைவன்
தந்த
மாவீரன்.....!!

காலத்தால்
அழியாத
காவிய
நாயகர்கள்
உங்களை
காலமெல்லாம்
நாம்
மறவோம்.....!!

மண்ணுக்காக
வித்தாகிய
உங்களை
விழிநீரில்
நேசிக்கிறோம்.....!!
வாழும்வரை
சுவாசிக்கிறோம்.....!!

ஈழத்தின்
இன்றய
இழிநிலை
கண்டு..... இதயம்
வெடிக்கிறது.....
ஈழம்
கண்ட
இன்னல்களை
மறந்தே
போன
இனம் கண்டு......!!

தீபத்தின்
சுடரில்
உங்கள்
வீரத்தின்
விம்பம்
விழிநீரை
ஊற்றுதே.....!!

தாய்மண்ணைத்
தாயாக
தானைத்
தலைவனை
தாயகமாக
களமாடி
காவியமான
வீரத்தின்
புதல்வா
உனக்கு
பூவைத்து
நேசிக்கிறேன்....!

இருவிழியில்
இனம்புரியாத
வலி....
நம் இனத்துக்கு
ஏனிந்த
தீராத
வலி....!தெய்வத்தின் கருவறை தேடாத

எழுதியவர் : வாழ்க்கை (26-Nov-17, 2:41 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 122

மேலே