வேங்கையே வெளியில் வா

நாளும் பொய்யுரைத்து...
நாடகம் தினம் புனைந்து ...
மக்களை திசை திருப்பும்..
கயவரின் தோல் உறிக்க
வேங்கையே வெளியில் வா!!
கட்சிக்கு செம்பு தூக்கி
காட்சிக்கு தன்னை மாற்றி
கதைகள் புனையும்
ஊடக நரியின்
கழுத்தை முறிக்க
வேங்கையே வெளியில் வா!!
வடபுறத்து பகைவர் கூட்டம்.
வஞ்சக ஆட்டத்தை காட்டும்
முன்பே கொலை வாளெடுத்து
வேங்கையே வெளியில் வா!!!
சிங்கத்தின் குகைதனிலே
சிறு நரியும் என்ன செய்யும்..
பூட்டிய இரும்பு கதவு
ஒருநாளும் திறக்காது
உடைத்தெறிந்து
வேங்கையே வெளியில் வா!!!
எதுவும் சரி இல்லை
ஒன்றும் நேர் இல்லை..
இறங்கு வீதியில்..
இடர் அகற்று பாதையில்.
இனியொரு தாமதம் நமக்கில்லை
கைவிரித்து வந்த பகைவரெல்லாம்
நம்மை பொய்யுரைத்து
கவிழ்க்கும் மும்பே..
அவர்தம் நாவருக்க
வேங்கையே வெளியில் வா!!!
வழி வழி வந்த மறம் எங்கே!!!
தினவெடுத்த தோள் எங்கே!!!
மறப்போர் வீரம் எங்கே!!!
திருப்பு உன் முகத்தை ...
சாம்பலாக்கு எதிரியை...
இனிஒரு எதிரியும்
மண்ணின் கால்பதிக்க
அஞ்சட்டும்
புலியென புறப்பட்டு வா!!
வேங்கையே வெளியில் வா!!!

எழுதியவர் : (26-Nov-17, 1:38 pm)
சேர்த்தது : க நேசன்
பார்வை : 90

மேலே