காதல் தேசம்

இந்த நொடி நகராமல் நின்றாலென்ன... -காதல் நிலா
````````````````````````````````````````````````````````````````````````````````
அருவியை விட வேகமாய்
ஊற்றுகிறாய் உன்னை என் இமைகளுக்குள்.
காதல் காய்ச்சல் நிறைந்த
தேசத்தில் நாமிருவரும் நீந்துகிறோம்
அமிர்தம் கலந்த சிற்பம் நீ...
அதை அருந்தும் கலைஞ்சன் நான்...

மெல்ல மெல்ல நாட்களை
மென்றுகொண்டிருக்கிறேன்
இறப்பை வென்று
இந்த நொடி நிற்கவேண்டும் உன்னை ,
இழந்துவிடக்கூடாதென்பதற்க்காய்...

இதயத்தின் ஓசைகள்
காதல் எல்லைகளைத்தாண்டி ஒலிக்கிறது,
உன்னோடு வாழும் காலத்து
நினைவின் தித்திப்பில்...

கொஞ்சம் சண்டை ,
கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் பிரிவு ,
கொஞ்சம் வலி ,
கொஞ்சம் சுகமும்
என்னில் நீ வாசித்துக்கொண்டிருக்கிறாய்...

நகர்ந்து விடாதே என்னை விட்டு
நரகத்தின் முகவரி நானாகிப்போவேன்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (28-Nov-17, 1:09 pm)
Tanglish : kaadhal dhesam
பார்வை : 287

மேலே