அவளை நான் பார்த்த முதல் பார்வையில்

மனக் கலவரம் அதில்
மனம் உழன்றிட,
தொடங்கிடும் என் பொழுது!

ஒளி மங்கிவரும் மாலை அதில்
மனம் மயங்கிடும்
தயங்கிடும் பொழுது
உன் மதிமுகம் அதை நான் கண்டேன்!

பேரழகை என்னவென்று சொல்ல!
என்னெதிரே வந்தவள் நீ
என்னைக்(களவு) கொள்ள!

தொலைக்காததை தேடி நின்றே!
தொலைத்தேனடி என்னை மெல்ல மெல்ல!

உன் மூக்கு முழியில் குறையேது!
எந்தக் கற்பனைக்குள்ளும் அடங்காது!

மைச்சிறைக்குள் உந்தன்
குளிர்ந்த விழிகள் ஒளிவீச!

என் மனச்சிறைக்குள்
ஏனோ மூச்சுத் திணறல்!

உன் வகிடில் சரிந்து
வட்டப் பொட்டில்
மூர்ச்சையானேன்!
பின்
மூக்கின் நுனியின்
வெப்பக் காற்றில்
சிலிர்த்துப் போனேன்!

தேனில் நனைந்த பூவிதழோ
வண்ணம் பூசிய உன் அதரம்!

அதில் ஒரு துளியாய்
என் பெயரும் சிந்த மோட்சம்பெரும்!

மின்னுகின்ற உந்தன் மேனி!
பாலில் குழைத்த மாலை
வானின் வண்ணம் தான் நீ!

ஒரு காதல்தான் செய்துவிட்டு
போகிறேனே விட்டுவிடு!

என் ஆயுளையும் நீட்டித்து கொள்கிறேன்
தினம் நீ என் கண்களில் ஒரு முறையாவது பட்டுவிடு!!

எழுதியவர் : ஷான் மணி (28-Nov-17, 3:12 pm)
சேர்த்தது : SHAN MANI
பார்வை : 186

மேலே