கவியரசு

தமிழல்லவோ வார்த்தை தந்தது
அமிழ்தல்லவோ சுவையைத் தந்தது
கவியல்லவோ கவிதை தந்தது
கவிதைகளோ பொருளைத் தந்தது
பழகுதமிழ் பாடந் தந்தது
பாடுந்தமிழ் பாடல் தந்தது
முழங்குந்தமிழ் வசனம் தந்தது
முத்தமிழும் மொழியில் வந்தது
நாத்தீகக் கருத்தி ருந்தது
நாளும்மனம் கேள்வி கேட்டது
ஆத்தீகம் ஒளியைத் தந்தது
அனுபவமோ தெளிவைத் தந்தது
சட்டிசுட்டு கைகள் விட்டது
தத்துவங்கள் புரிந்து விட்டது
பட்டுப்பட்டுத் தெளிந்து விட்டது
பக்குவங்கள் வந்து விட்டது
காமங் கோடி காதல் தந்தது
காமகோடி ஞானம் தந்தது
காஞ்சியினால் வாதம் செய்தது
காஞ்சியிடம் விடையைக் கண்டது
பெரியாரால் வேகம் கண்டது
பெரியவரால் விவேகம் கண்டது
கருத்தெல்லாம் கவிதை யானது
கவியரசோ மனதை வென்றது
எறும்பினுக்குள் யானை வந்தது
இதயத்திலே ஞானம் வந்தது
மறுத்தமனம் ஒப்புக் கொண்டது
மனம்திறக்கக் கவிதை வந்தது

எழுதியவர் : சு.ஐயப்பன் (29-Nov-17, 4:20 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 2108

மேலே