எப்பொழுது எழப்போகிறோமிங்கே

அடிமைகளின் ஆட்சியிங்கே!
பொய்யும் புணைசுருட்டும் பிரதானமிங்கே!!!

ஏமாற்றுபவனின் ஏற்றமிங்கே!
ஊசலாடும் உழைப்பவனின் உயிருமிங்கே!!!

மயிரேபோனாலும் மானமிங்கே!
தன்னுடமை தன்னுயிர் காப்போமிங்கே!!!

பழம்பெருமை பறைசாற்றுமிங்கே!
திருடனும் கூத்தியாளும் தலைமையாளுமிங்கே!!!

கொள்ளையடிப்பவன் கோடிகளில்புரளுமிங்கே!
விளைவிப்பவன் நிற்கதியாய் நிற்குமிங்கே!!!

போர்வரப்போகிறதெனும் கூத்தாடியுமிங்கே!
போதையில் மூழ்கிட்ட இளைஞனுமிங்கே!!!

கல்வியும் விற்பனையானதிங்கே!
கலவி கள்வரின் கவசமானதிங்கே!!!



உலகமயமாதலெனும் சூழ்ச்சி வலைவிரித்திடுமிங்கே!
உணவுகிட்டிடா உயிருமிங்கே!!!

உயிர் உருவாகிட்ட உலகமிங்கே!
வாழ்வுதேடும் விண்அறிவியலிங்கே!!!

கண்டிடா கடவுளின் கருவறையிங்கே!
கருவழிப்பு மதமிங்கே!!!

ஆள்பவன் நினைத்தால் நாமும்செல்லாகாசிங்கே!
புகழோன்சேர்த்தகணக்கு தேவையில்லையிங்கே!!!

மாதவிடாய் பஞ்சுக்கு வரியுமிங்கே!
தண்ணீருக்கு தவித்திடனுமிங்கே!!!

அதிகாரிக்கு ஆயிரம் பரிட்சையிங்கே!
அரசனுக்கு கைநாட்டுபோதுமிங்கே!!!

ஏழையின் வருவாய்க்கு ஆதாருமிங்கே!
அறக்கட்டளையின்பேரில் கொள்ளையடித்திடலாமிங்கே!!!

படைத்திட்ட காக்கப்படிடா இவ்வுலகுமிங்கே!
நிந்தையில் புதுஉலகுமிங்கே!!!


யாவுமறிந்த படித்த கோழையுமிங்கே!
இந்நிலமையும் மாற்றுவோமென்றுண்ர்வோமிங்கே!!!

இவன்!
பிழைக்த்தெறியா நாடோடியுமிங்கே!!!!

எழுதியவர் : சிவகுமார் ந - பவானி (29-Nov-17, 5:39 pm)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 729

மேலே