PIZZA குடிசை

PIZZA குடிசையில் ஒரு மாலையில்
அவளுடன் நான்
PIZZA வை துண்டு துண்டாக
அவள் செவ்விதழில் சுவைத்து தின்றாள்
நான் ரசித்தேன் ரசித்துக் கொண்டே இருந்தேன்
துண்டு துண்டாக ஆஹா ஆஹா என்ன அழகாக சாப்பிடுகிறாள் !
நான் ரசித்துக் கொண்டே இருந்தேன் அவள் புசித்துக் கொண்டே இருந்தாள்!
தட்டு காலி !
ஓ நோ ....நீ ஒரு பீஸ் கூட சாப்பிட வில்லையா ?
இன்னொன்று ஆர்டர் பண்ணலாமே என்றாள் .

வேண்டாம் ....நான் ரசிப்பேன் ...எனக்கு மகிழ்ச்சிதான்
நீ புசித்துக்கொண்டே இருப்பாய் ...உன் வயிற்றுக்கு கேடு என்றேன் !

சர்வர் பில் கொண்டு தந்தான்
ஒரு PIZZA வுக்கு ஆயிரம் ரூபாய் பிளஸ் GST யா ........?
என்று கூவி விட்டேன் !

பெல்லாரி ஆனியன் காஷ்மீர் டொமட்டோ ஸ்பெஷல் PIZZA சர்ர் ..........என்றான்

அட்டை இல்லை யா என்றாள் ...இல்லை என்றேன்

என் பர்ஸ் அவள் பர்ஸ் இரண்டையும் டேபிளில் கொட்டினோம்
வண்ண வண்ண கரன்சி களில் காந்திஜி சிரித்தார் ...நிக்கல்கள்
உருண்டோடின ....
எல்லாமுமாகா ஆயிரம் + தேறியது ....கொடுத்தேன்

நோ டிப்ஸ் ப்ளீஸ் என்றான் சர்வர்
தேங்க்ஸ் என்று அசட்டுச் சிரிப்புடன் நன்றி நவின்றேன் .

வெளியே வந்தோம் ....விடை பெற்றாள்
ஆட்டோவிற்காக பர்சில் துழாவினாள்
ஓ மை CARD !!!! என்று குடிசைக்குள் மீண்டும் ஓடினாள் !

கள்ளி .....!!! என்று அவளைப் பின்தொடர்ந்தேன் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-17, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே