அன்புக்கு அன்பு

" என்னங்கண்ணே! இரண்டு நாட்களாக உங்களை சமூக வலைதளங்கள் பக்கமே காணவில்லையே! எங்க போனீங்க? "

" அது ஒன்னுமில்லை தம்பி. புயல் கிளம்பிடுச்சு. யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென்றார்கள். அதான் வீட்டுலேயே தங்கிட்டேன். ".

" ஓகோ! "

" அட! நம்பு தம்பி. "

" நம்பிட்டேன். "

" என்னை ரொம்ப மிஸ் பண்ணியா? "

" இல்லையே! எனக்கு இருக்கிற வேலைகளில் அதுக்கெல்லாம் நேரமில்லைங்க... "

" ம்ம். நம்பிட்டேன் தம்பி... "

" பழிக்குப்பழியா? "

" இல்ல தம்பி. அன்புக்கு அன்பு. "

" ஸ்ஸப்பா போதும். படிக்கிறவங்க கல்லால் அடிப்பாங்க.. "

" அடிச்சா வாங்கிக்கோ. அதுவும் அன்பு தானே.! "

" இதுக்குத் தான் உங்களைத் தேடினேன் அண்ணே!. "

" வராம பொய்டுவோமா தம்பி அன்போட தேடும் போது? "

" சரிங்கண்ணே! கிளம்புறேன். "

" ம்ம். நாளைக்கு வீட்டுப்பக்கம் வா. உனக்கொரு பரிசு இருக்கு.. "

" பரிசா!? இதோ கிளம்பிட்டேன்.. "

" தம்பி! உன்ன நாளைக்குத் தான் வரச் சொன்னேன்.. "

" அதான் அண்ணே! சீக்கிரமே தூங்கக் கிளம்பிட்டேன். "

" நல்லா வருடா. "

" உங்க தம்பி நான், வேற எப்படி வருவேன்,! "

" போதும்டா சாமி. போய் தூங்கு..."

" குர்கூர்உர்உர்ர்ர்ர்! "

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Dec-17, 7:30 pm)
பார்வை : 487

மேலே