மரண மடி

மரணத் தாயின் மடியில்
படுத்து கிடக்கிறேன்

உறங்கச் சொல்லி மிரட்டுகிறாள்
ஏனோ உறக்கம் வரவில்லை

எங்கோ தொலைவில் ஒருவள்
இன்னிசை படிக்கிறாள்

என் காதில் அது
மெல்ல கேட்கிறது

என் விழிகளும் சற்று
மயக்கம் கொள்கிறது

மெல்ல அந்த குரல்
என்ன நெருங்குகிறது

என் உறக்கமும் மெல்ல
அதிக மாகிறது

மரணத் தாய் மிரட்டியும்
வராத உறக்கம்

யாரோ அவள் பாடலில்
வந்து விட்டதே

என் உயிரும் உறங்கி விட்டதே !

யாரும் வெளியில் சொல்லிவிடாதீர்
பாடியவள் இவன் காதலி யென்று !!!

ஆமாம் அவள் வேறொருவனின் மனைவி !!!

அவனாவது நிம்மதியாக வாழட்டும் !!!

எழுதியவர் : (30-Nov-17, 2:35 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : marana madi
பார்வை : 642

மேலே