மன்னிக்க வேண்டுகிறேன்
மரங்கொத்தும் கோடாரியாக உன் நினைவுகள்
என் மனதைக் கொத்திச் சரிக்குதடி
வார்த்தை தேள் கொட்டியதால் வருத்தமா ?
என் கோபம் களைவாயா கோல மயிலே
மாரி பார்த்து ஏங்கும் கோடைப் பயிரானேன் நான்
முத்துக்கள் கோர்த்திருக்கும் உன் முல்லை
வாய்ப் பேழையினை மூடியிருக்கும்
அந்த ரோஜா இதழ்க் கதவுகளை திறந்து
என்னை மன்னித்தேன் என உன் குயில் பாடும் குரலால்
என்னிடம் கூறக் கூடாதா?
ஆக்கம்
அஷ்ரப் அலி