நீ கொண்ட காதலை

அன்பே
மலைதனில் உருவாகும் அருவி
உந்தன் பாதம் தழுவி
தன் ஆசையை
தீர்த்தபோது கண்டேனடி!
அலையது உன்மேல் கொண்ட காதலை!!


உணரவைக்கும் பூந்தென்றல்
உட்புகுந்து சென்று
உன் உள்ளத்தை உரசி சென்றபோது
கண்டேனடி!
ஈரம் கொண்ட காற்று
உன்மேல் கொண்ட காதலை!!

முடியாத ஒரு பாதையில்
முன்பே நீ வந்தபோது
முகத்தினை முடிச்சென்ற நிலவு
முழுவதுமாக உன்னை காண
வந்தபோது கண்டேனடி!
கறையும் நிலவு
உன்மேல் கொண்ட காதலை!!

சற்று தூரம்
நீ பிரிந்த நேரம்
சலனங்கள் நான் கொண்டிருந்த காலம்
முந்தி வந்த "என் கண்ணீரை"
முத்துக்களாக நீ மாற்றியபோது
கண்டேனடி!
கண்ணே
என்மேல் நீ கொண்ட காதலை...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Dec-17, 7:27 pm)
Tanglish : nee konda kaadhalai
பார்வை : 164

மேலே