மாமனுக்கு ஆசையப்பாரு

தலையணைக்கு பதிலா
உன் மடிமட்டும் தாயேன்டி
உணவுக்கு பதிலா
நான் ஆசமுத்தம் தாரேன்டி...

இரகசியமா வரச்சொல்லி
இடுப்ப கில்லிப் போவேன்டி
சாம்பல் தின்னவைக்க
மாமன் சாக்குபோக்கு சொல்லுவேன்டி...

யார்யாரோ சொன்னாங்கன்னு
நம்மஉறவ தள்ளிப் போடாதடி
வெளியில என்னத்தள்ளி
மலர்ந்த பூவப்போல வாடாதடி...

ரெண்டுபுள்ளன்னு சொல்லிப்புட்டு
ஒத்தப் புள்ளையோட நிக்கிறேன்டி
உன்னப்பாத்த ஏக்கத்துல
நெதமும் செத்துப் போறேன்டி...

இரவெல்லாம் குளிருதுன்னா
என்ன கம்பளமா போத்திக்கடி
யாரும் பாக்கக்கூடாதுன்னா
ஜன்னல இழுத்து சாத்திக்கடி...

மாமனுக்காக கொஞ்சம்
மனசு இறங்கித்தான் போயேன்டி
நடுசாமம் ஆகப்போது
சீக்கிரமா உள்ள வாயேன்டி !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (5-Dec-17, 10:32 am)
பார்வை : 97

மேலே