பெண்
அன்புள்ள நண்பர்களே, பழங்காலத்தில் பெண்களை போற்றிய நாடு இது ஆனால் இப்போது பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் துன்பத்தை கணக்கிடமுடியாது. ஏன் இந்த நாடு இப்படி மாறியது இதற்கு யார் காரணம் என்று பலபேர் கேட்க இன்னும் சிலர் பெண்களுக்கு துன்பம் இழைத்தவர்கள் தகுந்த தண்டனை வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆண்களே உங்களை பொறுத்த வரை பெண் என்பவள் இழிவானவள் என்று நினைக்கிறாய் ஆனால் பெண் வாழ்வில் எவ்வளவு போராட்டம் இருக்கிறது என்று உனக்கு தெரியுமா. அவள் பிறந்தது முதல் இறப்பது வரை துன்பத்தை மட்டுமே அனுபவக்கிறாள். பிறந்த உடன் பெண்ணாக பிறந்ததாள் பெற்றோரிடம் வசைப்பேச்சிக்கு ஆள்ளாகிறாள், பெரிய பெண்ணாகும் போது உடல் மாற்றத்தினால் துன்பத்தை அனுபவிக்கிறாள், திருமணம் முடிந்த உடன் மாமியார் வீட்டில் துன்பத்தை அனுபவிக்கிறாள், குழந்தை பிறக்கும் போது வலியினால் துன்பப்படுகிறாள், தாய்யானவுடன் பெற்ற பிள்ளைகளால் துன்பத்தை அனுபவிக்கிறாள். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை மட்டும் அனுபவிக்கும் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். உங்களை பெற்றவளும் ஒரு தாய் தான் என நினைத்து பெண்களை வணங்குகள். பெண் சமுதாயத்தை வாழவிடுங்கள். பெண் இனம் வாழ்கவே.