நிழலற்ற கோபுர காதல்
நிழலற்ற தஞ்சை கோபுரம்
நிழல் தர துடிக்கிறது
வெயிலோடு போர்தொடுக்க
நீல வானத்தை வேண்டுகிறது
வெப்ப காற்றை தடுத்திடவே
வெண்முகிலை கேக்குகிறது
நீ விண்மீனை பிடித்துடவே
கோபுரமும் குனிகிறது
வாசல்தோறும் மக்கள் இருக்க
உன் வரவுக்காக ஏங்குகிறது
வானுலகம் வாய்தாலும்
வாடிப்போய் நிற்கிறது
ராஜராஜ சோழன் வரைந்திட்ட
வான்மிகு கோபுரத்தில்
நிழல் மட்டும் நீங்கவில்லை
என் காதல் உணர்வுகளை
அதன் கடவுளாக படைத்துள்ளான்
கண் திறந்து பார்