எட்டி ஓடுகிறாய்
என் மீதுன் கடைக்கண் பார்வை
பட வேண்டும் யாரும் எழுதா
காதல் காவியம் ஒன்றை நான்
படைத்திட வேண்டும்.
உழாத நிலம் போல இறுகியே
இருப்பதென்ன உன் மனம்
இரவு பகல் பாராது அதை
உழுது காதல் விதையை
விதைத்திட காத்திருப்பதென்ன
என் மனம்.
விழியுளி கொண்டு உணர்வை
செதுக்கி உயிரை படைக்கிறாய்
இனித்திடும் காதலை என்னுள்ளே திணித்துவிட்டு
எட்டியே ஓடுகிறாய்.
நீயும் நானும் ஒன்றாக வேண்டும் அதற்கு கடவுள்தான்
துணையாக வர வேண்டும்
உயிரிலும் உணர்விலும் நம்
காதல் கலந்தாக வேண்டும்.
நிலவே நீ தூதுபோ!
இரவே நீ விடிந்துபோ!
மலரே நீ மணம் வீசி வா அந்த
மங்கையிடம் என் மனதை
கொண்டு சேர்த்திட நீ வா!