தனக்காக வாழாத ஒரு ஜீவன்

தனக்காக வாழாத ஒரு ஜீவன் யார் என்று என்னை கேட்டால் பெண் என்று தான் நான் சொல்லுவேன். ஒரு பெண் தன் குழந்தை பருவத்தில் இருந்தே மற்றவர்களுக்காக வாழ தொடங்குகிறாள். ஒரு பெண் உடுத்தும் உடையாகட்டும், உண்ணும் உணவாகட்டும், படிக்கும் படிப்பாகட்டும் அனைத்தையும் அவள் தனக்காக செய்வதில்லை தன் பெற்றோர்களுக்காக தான் செய்கிறாள். இவ்வாறு தனக்காக வாழாத ஒரு வாழ்க்கையில் அந்த பெண்ணின் மனவேதனையை யாரும் அறிய விரும்புவதில்லை. அவளிடம் யாரும் மனம்விட்டு பேசுவது கூட இல்லை. ஒரு பெண் என்பவளும் ஒரு உயிர் தான் இறைவன் அவளுக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வதற்க்கு தான் இந்த உலகில் அனுப்பிவைத்துள்ளான். ஆனால் அவளை அவள் விருப்பத்திற்க்கு வாழவிடுவதில்லை. நண்பர்களே நான் உங்களிடம் மண்டியிட்டு ஒன்று கேட்டு கொள்கிறேன் தயவு செய்து ஒரு பெண்ணை அவள் விருப்பத்திற்க்கு வாழவிடுங்கள். முடிந்தாள் போராடுங்கள் பெண்களுக்காக இப்போதைய நிலை மாற வேண்டும் அவளும் இந்த உலகில் ஒரு சுதந்திர பறவையாய் பறக்க வேண்டும்.

எழுதியவர் : விஷாலி (10-Dec-17, 7:46 pm)
சேர்த்தது : vishali
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே