செந்நிழல்

துகிலுரிக்கப்பட்ட என் மனித
பிம்பத்தில் கீறி விளையாடும்
கொரூரத்தின் சாட்சியங்களை
விடுவிக்கச் சொல்லி
நான் கெஞ்சிய வார்த்தைகளில்
சிலவற்றை பொறுப்புடன்
கேட்டு நகைக்கும் காமத்தின்
வெறியேறிய நாக்குகளின்
வசம் தங்கி விடுகிறது
பெண் அடிமையின் அடையாளமெனும் அஸ்திவாரம்...

ஓய்ந்து வெளியேறிய விந்துவின்
பசபசப்பில்
ஒட்டிக்கொண்ட
என் ஆதி கறுப்பு நிழலே
துணிந்து எழுந்து விட்டேன்
என் உடலின் அழுக்குகளை துடைத்துவிட்டு...
முக்காடெதெற்கென முடிச்சவிழ்த்து
தலைவிரிக் கோலத்தில்
தெனாவட்டோடு தொடர்கிறேன் என்
பெண்மையின் புனிதத்தை...தீட்டை...
புகுத்திய கற்பிதங்களை துகிலுரித்த வண்ணமாய்...
இதற்கு மட்டும் கறுப்பை கிடாசிவிட்டு
செந்நிழலாகிவா... என்னோடு...
என் நிழலே....

எழுதியவர் : செந்தழல் சேது (11-Dec-17, 12:46 am)
பார்வை : 78

மேலே