விழித்துக்கொள் தமிழா
![](https://eluthu.com/images/loading.gif)
மாட்டி தவிப்பவன் மனிதனென்று
மாட்டு மூளைக்கு தெரியவில்லையா..!
மானங்கெட்ட தமிழக அரசே
மனதில் உமக்கு ஈரமில்லையா..!
வாக்கு உமக்கு தேவைப்பட்டால்
வாசல் தேடி வருகின்றாயே..!
வடியும் கண்ணீர் வற்றவில்லை
வருத்தம் போக்க நேரமில்லையா..!
போட்டி போடும் தேர்தலுக்காக
போன உயிரே மறந்துவிட்டாயா..!
போன மீனவர்கள் ஏழையென்று
போனால் போகட்டும் நினைத்துவிட்டாயா..!
நீங்கள் நினைத்தாலும்
ஆச்சரியமில்லை
நீதி செத்த நாட்டினிலே..!
இயற்கை மீது பழிபோட்டு
இரங்கல் செய்தியும் சொல்லுவீர்கள்..!
இலவச ஆசையே தூண்டிவிட்டு
இனியும் ஏமாற்ற எண்ணுவீர்கள்..!
தமிழா விழித்துக்கொள்..!!!
தலையெழுத்தை மாற்றிக்கொள்..!!!