இந்திய மீனவன்

மானம் கெட்ட அரசியல் ..............
தகுதி இல்லாதவருக்கு ஏன் தலைமை பொறுப்பு

பிடிக்காத அரசியலுக்கு ஏன்
ஆட்சி பொறுப்பு

ஊடகமும் மறைக்குது
உண்மை நிலையை

மீனவன் அவன் தமிழன் என்பதால்
அள்ளிக்கொண்டானோ கடலரசன்

அவன் நிலையை கூறவே
தமிழ் ஊடகம் ஒன்று இல்லையே

மீனவனுக்கு நீச்சல் தெரியும் என்பது
குழந்தைக்கும் தெரியும்

அப்புறம் ஏன் மீட்பில்
இவ்வளவு தாமதம்

மிதப்பவர்களை மீட்கவா
இந்த கடல் பயணம்

தயவுசெய்து சென்றுவிடுங்கள்
கேரளாவுடம்

அப்போதாவது கூறும் உங்களை
இந்திய மீனவன் என்று ,.........

எழுதியவர் : வான்மதி கோபால் (11-Dec-17, 11:08 am)
Tanglish : india meenavan
பார்வை : 160

மேலே