வினைகளும் விளக்கங்களும்
பற்றினால் பற்றியவரையும்
சேர்த்து எரித்துவிடும்
கோபத்தை பற்றாது வை,
பற்றற்ற பார்வையை
பற்ற வை.
இகழ்ச்சியினால் இடிக்க வரும்
இன்னலை இருத்தி வை,
புகழ்ச்சியினால் புயலாய் வரும்
தலைக்கனத்தை இறக்கி வை.
எதிர்பார்ப்பினால் ஏறி வரும்
ஏமாற்றத்தினை எரித்து வை,
ஏமாற்றத்தினால் ஏந்தி வரும்
விரக்தியை விசாரித்து வை,
தோல்வியினால் சேர்ந்து வரும்
துயரத்தை துடைத்து வை,
துயரத்தினால் துவண்டு விழும்
மனதை தூக்கி வை.
வெற்றியினால் வரும்
வேட்கையை தூண்டி வை
வேட்கையினால் வரும்
விலாசத்தை விளக்கி வை