ரோஜா ஏனோ சிரிக்கவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
தோட்டத்தில்
ரோஜா ஏனோ சிரிக்கவில்லை !
வாட்டம் ஏனோ ?
முள் சூழ்ந்த வருத்தமோ ?
தென்றலின் வருகையில் சிரிக்குமே !
நீர் தெளித்தான் ; பின்னும் சிரிக்கவில்லை !
பறித்து சூடிட அவள் வரவில்லை என்பதாலோ ?
ஒருவேளை இருக்கலாம் என்று நடந்தான் தோட்டக்காரன் .
புன்னகையுடன் அவள் வர
ரோஜாவுடன் நானும் காத்திருக்கிறேன் !