தாவணி மலர்

தாவணி மலர்
தாமரை குளத்தை பூர்ண சந்திரன் எட்டிப் பாா்க்கும் நேரம்
தாவணி மலரின் நினைவுகளால் நான் எழுதும் கடிதம்......
காற்றின் மொழியில் நான் எழுதும் எழுத்துக்கள் உன்னைத் தேடும்
காலம் முடியாமல் கடிகார வாசல் உன்னை பாா்த்து காத்திருக்கும்
பௌா்ணமி முகத்தின் புன்னகைக் காண பருவ நெஞ்சம் துடித்திருக்கும்
பண்புகள் கொண்ட பெயரை கேள்க காதுகள் இரண்டும் தவித்திருக்கும்
காாிருள் பொழுதில் உன் கனவுகள் கண்ணில் நிறைந்திருக்கும்
காா்மேகம் மறையும் தருணம் என் கடிதம் உன்னில் நிலைத்திருக்கும்
- சஜூ