ஜோதிட கவிதை

கடன் அன்பை முறித்துவிடுமாம்!

கடன் என்பது பொருள்பற்றுகள் மட்டும் இல்லை!

கடன் என்பது உயிர் பற்றிலும் உள்ளதை உணர்ந்து கொள்!

மனதை காதல் என்ற பெயரில் கடனாக கொடுத்துவிடாதே!

ஏன் தெரியுமா? முறியப் போவது இருவரின் அன்புகள் மட்டும் இல்லை!

முறியப் போவது உங்கள் இருவரின் உயிர்களும்தான்!

கடன் அன்பை முறிக்கும்! காதலித்தால் மனமே முறியும்!

மனம் என்பது இறைவன் வாழும் ஆலயமாகும்!

மனம் முறிந்தால் இறைவனும் நம்மை விட்டு பிரிந்துவிடுவார்!

காதலும் வேண்டாம்! உயிர்கள் பிரிதலும் வேண்டாம்!

வாழ்வதற்கு தானே பூமிக்கு வந்தோம் வாழ்வோமே!

- ஜோதிட கவிஞர்-
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
97515 00033, 97516 30033
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா

எழுதியவர் : (13-Dec-17, 7:58 pm)
Tanglish : jothida kavithai
பார்வை : 53

மேலே