எம் மொழி தமிழே

தோழா!.....
நீ! என் தாயின் மொழியினை
சுவைத்ததுண்டா!.....
சுவையிலும் சுவையடா
என் தாயின் மொழியாட!....
பன்னாட்டிலும் பறந்து விரிந்தவள்
பகைவரையும் அரவணைக்க
முனைந்தவள்!.....
வீரத்தில் பிறந்தவள்
மாவீரர் பலரை
ஈன்றவள்!.....
ஒளவை கிழவியின்
மூன்றேழுதாய் மூதுரை
என்னும் சிறப்பெழுத்தாய்
சிறந்தவள்!.....
மூவேந்தரின் முதுகெலும்பாய்
முக்கலையின் சிறப்பாய்
அமைந்தவள்!....
சிலப்பதிகாரம் என்னும் சில எழுத்தில்
வாழ்வியல் சிந்தனைகளை
சொன்னவள்!....
அவள் அடிமைப்பட்டதுண்டு
எவரையும் அடிமைப்படுத்த
எண்ணியதில்லை!....
திருக்குறளால் தீண்டாமையை
ஒழித்தவள்!.....
வள்ளுவனை வாய்நிறைய
அழைத்தவள்!....
மதுரை ஆண்டு
மதிபோல பூண்டு -அழியாமல்
நிலைத்தவள்!.....
வீரம் கொண்ட பாண்டியரை
விண்ணாளச் செய்தவள்!....
அவள் கருணையிலே கவிதைகள்,
காப்பியங்கள் பல
தன்னுள் கொண்டவள்!....
அவளுக்கு சங்கங்கள்
பலவுண்டு -சமயங்கள்
அவளுக்கில்லை!....
பெருமைகள் பலவுண்டு
பேதம் அவளிடமில்லை!....
அகநானுற்றில் அமுத
வார்த்தை வீசியவள்
புறநானுற்றில் புல்லாங்குழல்
வாசித்தால்!....
அவளின் மொழி கவிதை, வல்லினமோ
வாரணம் -மெல்லினமோ
மெல்லிசை -இடையினமோ
இன்னிசை!....
மணிமேகலையினை மணிபோல
வாழ்த்துவாள் -சிந்தாமணியினை
சீர்போல தாலாட்டுவாள்!....
பாரதியால் போதனை பல
பாரெங்கும் வீசப்பட்டவள்!......
அகத்தியரின் அருமையும்
காவிரியின் குளுமையும்
கொண்டவள்!.....
தாசன் பலப் பெற்றவள்
தரமான கல்வி
கொடுத்தவள்!....
சிவனின் மூன்றாம்
கண்ணே -தெற்கை
வாழ வைத்தாய் பெண்ணே!...
குளத்தில் தாமரையாய்
பூத்தவளே! குன்றத்தில்
மயிலாய் காத்தவளே!....
இறைவன் நம் அன்னை நடையெய்
மயிலாய் படைத்தானோ!
மொழியில் குயிலாய்
இசைத்தானோ!.....
அவளின் கோபம்
தீ எரிய!
சோகம் மழை பொழிய,
வெட்கம் தென்றல் வீச,
சிரிப்பு கவிதைகளாய்
சிதறடிக்கிறதே!....
மழையின்றி மானிடர்
வாழக்கண்டதுன்னு!
உன் மொழியின்றி -எம்
கண்கள் உறங்க
கண்டதில்லை !.....
நீ! விண்ணையாண்டாய்
இந்திரன் தோற்றான்!
மண்ணையாண்டாய்
சேரன் தோற்றான்!...
ஒரு பெண்ணை ஆண்டாய்
மதுரை தோற்றது!
மூக்கனிபோல் இனிக்கும்
கவியே! அரங்கேற்றத்தில்
நிற்கும் மொழியே !
இலக்கியத்தில் இளவரசியாய்!
மொழிகளில் பேரரசியாய்!
தமிழரில் அரசாட்சியாய்!
வேள்வியின் தன்மையான
அன்னையே!....
விலைக்கு விலைப்போக
நீ என்ன பொண்கலமா?
மதிப்பீல் விண்னையாலும்
எம் மொழி தமிழே!.....

எழுதியவர் : பெரியகவுண்டர் (14-Dec-17, 6:15 am)
பார்வை : 659

மேலே