கெட்டி மேளம் முழங்கும் நாள்
மொட்டவிழ்ந்த பூக்களோ வாசமல ரானது
கட்டவிழ்ந்த கம்புகள் பந்தல்கா லானது
இட்டபந்த லின்கூரை சிற்பவரங் கானது
மட்டில்லா உன்னழகு என்சொந்த மானது
கட்டழகன் நானுனது சங்குக் கழுத்தினில்
கட்டிய தாலி கழுத்தினில் மாங்கல்யம்
பொட்டு புனிதம் எனும்பெயர் பெற்றிட
கெட்டிமே ளம்முழங்கும் நாள் !