மீசை மறைத்த புன்னகை

அடடா! என்ன அதிசயம்
சூரியன் உதித்த பிறகும்
நிலவின் நடமாட்டம்
வீதியில் இருக்கிறது..
ஐயோ! நம்ப முடியவில்லை,
தோகை மயில் வண்னம் தந்து
நூலாடையை மேலனிந்தவள்
தானே புயலாய்
என் வீட்டைக் கடக்கிறாள்..
யார் அவளோ?
எண்ணி விழைகிறேன்..
வில்லேந்திய புருவமுடன்
வீசி நடக்கிறாள்,
சிறுத்த இடையில் குடம் தாங்கி
பவனி வருகிறாள்,
என் மீசை மறைத்த புன்னகை
அவள் கண்டு
என்னுள் வறுமை கொள்கிறது..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (18-Dec-17, 8:11 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
பார்வை : 101

மேலே