மாறிவிட்டான் நண்பன்

மறந்து விடு மனமே - அவன் உன்
திறந்த நட்பை உதறிவிட்டான். - அவன்
பழையதை மறந்துவிட்டான் - உன்னிடம்
பழகுவதை துறந்துவிட்டான்.- நீ
நெருங்கிப் போனாலும் - அவன்
சுருங்கிப் போகின்றான்.- அவன்
சொல்லில் இனிமை இல்லை.- உன்
சொல்லைக் கேட்கவும் தவிர்த்துவிட்டான்
கல்லில் பட்டக் காயம் போல் தவிக்கவிட்டான்
முப்பது ஆண்டுகளுக்கு மேல் நீ
முகம் மலர்ந்து நண்பனாய் பழகினாய் - அவனோ
முகம் கொடுத்து பேசாமல் விலகப் பழகுகிறான்.
நீ நொந்துவிடவே அவன் - சந்தேக வார்த்தைகளை
சந்தோஷமாக பகர்கின்றான். - நீயோ
சங்கடப்பட்டு நகர்கின்றாய் - அவனது
பெற்றோர் இருந்தவரை நீ உற்ற நண்பனானாய் - இன்று
சீற்றம் தரும் புயலாய் வீசுகிறான்.- இந்தப்
புயலில் நீ தென்றல் வரும் என எண்ணுகிறாய்.
வயலில் புல் முளைத்தாலும் - அவன்
சாயலில் இனி இனிமை விளையாது.
கொண்டவளால் அன்று அவன் துடித்தான் - உன்னிடம்
குறை சொல்லி கண்ணீரை வடித்தான் . - கொடி
கொம்பு கிட்டும்வரை படரும் - கிடைத்ததும்
கொம்பையே அது மறைத்துவிடும்.-அதுபோல்
உன்னை அவர்கள் மறந்துவிட்டார்கள்.- நாளடைவில்
உன்னையே மறைத்துவிட்டார்கள் - இதை அறியாத நீ
உணர்வுப் பூர்வமாய் பழகி வருகிறாய் - அவர்கள்
உரைக்கும் சொல்லில் நீ புண்படுவது தெரிகிறது.
உணர்ந்துவிடு மனமே - அவர்களை நீ
மறந்துவிடு மனமே.- கடந்தக் காலங்களை நீ
மனக் கணக்காய் போட்டுப் பார்த்தாலும்
தினக் கணக்காய் உன்னை அவர்கள் கழிக்கிறார்கள்.
அவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்தாய் - இன்று
அவர்களோ இதுதான் தன் உலகம் இதுவென்று - உன்னை
அச்சப்பட வாழவிட்டார்கள். - நீயோ தனித்து
அழுகிறாய் - புழுதியாய் தவிக்கின்றாய்
தூய்மைக் கொள் மனமே. - இனி அவர்களை
தீண்டாதே தினமே.

எழுதியவர் : சங்கு chandramoulee (18-Dec-17, 9:09 pm)
பார்வை : 191

புதிய படைப்புகள்

மேலே