சமுதாய சதுரங்கம்
"அனைத்தும் சமம்" என கூறும்
சமத்துவவாதிகள்
சரிகிறார்கள் பொருளாதாரத்தில்
கூடுதலால்,
சமுதாயத்திற்காக சரணடையும்
சாமியார்கள்
சரணம் பாடுகிறார்கள்
கழுதைக்குரலில்,
சமத்துவத்தை சாடும்
சராசரிகள்,
தன் சமூகத்தையே
சுரண்டும் கரையான்கள்.
சமுதாயத்திற்க்காக உண்மை கூறும்
உத்தமர்களுக்கு
சங்கு ஊதுகிறார்கள்
சமர்த்தர்கள்,
சமுதாயம் ஓர் சதுரங்கம்
சாணக்யராய் சதுராடினால்
சகலமும் சரியாகும்
இந்த சமுதாயத்தில்.