மரத்தின் நிழலில்
ஓங்கி நீண்டு வளர்ந்த மரங்களை
வெறித்து நோக்கி
கொண்டிருக்கிறேன்...
உலகில் உள்ள ஊழல்களை விட
மரங்களின் உயரங்கள் குறுகியதாய்
இருப்பதை காண்கிறேன்.
மடிந்த இலைகள் மண்ணோடு
மரணம் பற்றிய உரையாடலில்..
இளம் தளிர்த்த இலைகள்
காற்றோடு காதல் உரையாடலில்..
தண்டோ வேருக்கும் உச்சிகுமிடையில்
தரகராய் காதல் தூதில்..
நானோ என் வார்த்தைகளை வாடகைக்காவது கேட்கமாட்டார்களா?.
என்கின்ற மெளனத்தின் கைதியாய்...
துளை போட்ட மூங்கில்கள்
புல்லாங்குழல்கள் ஆவதும்
தொடர்கொண்ட வலிகள்
என்றோவொரு நாளில்
வலிமை பெறுவதும் யதார்த்தங்களே...
நிலையான துணைகொண்டோர் என்று
இவ்வுலகில் எவரும் இல்லை..
தொடரும் பயணமதில்
களைப்பு தொடராமல் இருக்க
உரையாடிச்சென்ற உருவங்கள் தான் அதிகம்..