என் தேடல்

அழகிய மழை..
அனுபவிக்கும் வரை பெய்ய வேண்டும்!
ஆசை உணவுகள்..
நாவோடு சேர்ந்து மனமும் உச்சுக் கொட்ட வேண்டும்!
ஆலமரத்தின் நிழல்..
வேர்களில் என் உயிர் நட்புகளுடன் வாழ்ந்திட வேண்டும்!
ஆகாயத்தின் நீளம்..
காலங்கள் கடந்து கண்கள் திறவாமல் லயிக்க வேண்டும்!
அலாரத்தின் இரைச்சல்..
செவிகள் மடிந்து கனவுகளில் மூழ்கி மயங்கிட வேண்டும்!
அவமான அழுகை..
நெஞ்சை கிழித்து, உயிரை பிரிக்கும் அழுகைகளை மறத்திட வேண்டும்!
ஆழ்கடலின் ஆழம்..
ஏதோ ஒரு எண்ணம், எங்கோ ஒரு மௌனம்
இரண்டிற்கும் மத்தியில் தொலைந்து விட வேண்டும்!
அக்கினிப் பிளம்பு..
மயிர் சிலிர்க்கும் என் புண்ணகை பூக்களில்
ஓங்கி எரியும் எரிமலையும் சாந்தமாக வேண்டும்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (20-Dec-17, 8:28 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : en thedal
பார்வை : 129

மேலே