ஆண்டவன் தந்த அன்பு

ஐயிரு திங்கள் கருவினில் எனை சுமந்து
ஆயுள் முழுவதும் அன்போடு நெஞ்சுக்குள் எனை சுமந்தாய் !
இதயம் இரு துண்டாக்கி ஒரு பக்கம் எனக்கு தந்ததாலோ
எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன் உள்ளம் வலித்து
தலைகோதி என் நலம் அறிகிறாய்.......
பள்ளி நான் செல்ல புத்தக மூட்டையை நீ சுமந்தாய்
ஐந்நூறு ஆசிரியர்களுக்கு சமம் நீ அம்மா
கல்வி கற்பதை விட புனிதம் உன் காலை தொழுவதம்மா..........
நெடு வாசல் காளையென என்னை வளர்த்தாய்
வழி நெடுகிலும் முட்களை நீ துடைத்தாய் ..................
கிடைப்பது மீண்டும் ஒரு ஜென்மம் ஆயின்
வாழ்வேனேம்மா உன் கருவில் மீன் குட்டியென
உன் மார்பில் மான் குட்டியென ,..............................

எழுதியவர் : ராஜேஷ் (20-Dec-17, 8:28 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 425

மேலே