முரண்பட்ட Anatomy
என்னை
விழுங்கிய விழிகளில்
ப்ரவேசித்தேன்..
உன் இதயம் தொடும் முன்
Bypass வழியாக
நுரையீரலை அடைந்தேன்..
அடடே..
உன் கரிவளி பட்டுத்தான்
மொட்டுக்கள் பூக்கின்றனவோ!
சற்றே வழுக்கி
உணவுப்பையை அடைந்தேன்..
அடடே..
Buhari hotel leg pieceயும்
பவ்யமாக செறிக்கின்றதே!
மீண்டும் கீழே செல்ல
மனமில்லாமல்..
குருதியில் கலந்தேன்..
அடடே..
அந்த
கொசுக்கள் கூட
கொடுத்துவைத்தவைதான்!!
*கரிவளி - co2