மழையேமழையே

மழையே..மழையே..
ஆசை மழையே!
அன்பாய் பொழிந்தால்
சாரல் இனிதே!
மழையே..மழையே..
அழகிய மழையே!
பிழையாய் பொழிந்தால்
யாதும் கடிதே!

உன் கொள்ளை பிரியத்தில்
ஏரிகளின் கொள்ளளவை
ஏனோ..
மீறி விட்டாய்!

கந்து வட்டிக்கு உன்னிடம்
கடன் வாங்கிய மணல்களை
உன்னிடம் மூட்டைகளாக
திரும்பி தந்து விடுகிறோம்..
எங்கள் கூடுகளை
கரைத்து விடாதே!

வருண தேவன்
வரம் வேண்டி
வணங்கிய காலம் போய்..
வானிலை அறிக்கை
வசனம் வேண்டி
விடுமுறைக்கு காத்திருக்கிறோம்!

மழையில் பிழையில்லை..
பொழிவதில் தவறில்லை..
நிறைவதில் குறைவில்லை..
எங்கோ..
சில கரன்சி நோட்டுகளுக்கு
பல்லை காட்டிய மூடர்களால்..
இன்று
நம் மாடி கட்டிடங்கள் கூட
மூழ்கி கிடக்கின்றது!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (20-Dec-17, 8:23 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 138

மேலே