சனிப்பெயர்ச்சி
சனீஸ்வர பகவான்
எத்தனை முறை
இடம் பெயர்ந்தாலும்
எப்படி பார்த்தாலும்
எந்த இடத்தில் அமர்ந்தாலும்
நன்றாகவே இருக்கிறார்
சனீஸ்வர ஆலய பூசாரி
நாம்தான் அலைகிறோம் பயத்தோடு
கிரகமாற்றம் என்பதும்
காலம் என்பதும்
மாறி கொண்டேதான் இருக்கும்
அதுவே விதியும்
அனைத்தையும் வியாபாரமாக்கும்
மூடர்களே இறைவனையும்
வியாபார பொருளாய்
விற்று வருகின்றனர்
இனியேனும் பக்தியோடு
பகுத்தரிவையும் வளர்ப்போம்
பகுத்தரிவோடு பக்தியுடன்
ந.சத்யா