என் கதாநாயகன்

என் கதாநாயகன்
மேஜை இருந்தால் தான் படிப்பேன் என பிடிவாதம் போது
10 நாட்கள் தொடர்ந்து தானே மேசை செய்து கொடுத்த தந்தையே

டியூஷன் செல்லாமல் வேறிடம் சென்று வந்து பொய் சொன்ன போது
காரணம் கேட்டு, என்றும் உண்மையே பேச வைத்த தந்தையே

முதுநிலை படிப்பில் நான் பின் தங்கியிருந்த வேளையில்
என்னை ஊக்கமூட்டி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்தவரே

எங்களுக்காக சேர்த்து வைக்க வேண்டுமென்பதற்காக
எப்பொழுதும் மிதிவண்டி, பேருந்தில் பிரயாணம் செய்தவரே

ஒய்வு பெற்றவுடன் பிறந்த ஊருக்கே திரும்பி தோட்டம் அமைத்து
காய்கறிகளை பயரிட்டு பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரே

என்றுமே உழைப்பே உயர்வுக்கு வழி என்றும்
கடன் வாங்கக் கூடாது என வாழ்ந்து காட்டிய தந்தையே

இன்று நாங்கள் எங்கு இருந்தாலும் உன் அயராத உழைப்பும்
கண்டிப்பும் எங்களின் வாழ்விற்கு பலம் வாய்ந்த ஊன்றுகோல்
உன் வாழ்வு எங்கள் வழித்தோன்றல்களுக்கு சிறந்த மைல்கல்

உன் பிரிவில் வாடும்
ராரே

எழுதியவர் : ராரே (20-Dec-17, 5:57 pm)
சேர்த்தது : ராரே
Tanglish : en kadhaanaayagan
பார்வை : 1508

மேலே